×

நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளை இயக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளை இயக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் போக்குவரத்து தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் ஆகியவற்றினால் இயங்கும் வாகனங்களினால் சுற்றுச்சுழல் மாசு ஏற்படுகிறது. மேலும் பெட்ரோல், டீசல் உற்பத்திக்கு தேவைப்படும் கச்சா எண்ணெய் அதிக அளவு இறக்குமதி செய்யப்படுவதால் அன்னிய செலவாணிகளும் அதிகரிக்கிறது. இதனால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இதனிடையே, மிகவேகமாக மாறிவரும் பருவநிலை மாற்றத்துக்கு ஈடுகொடுக்கம் வகையில் மின்சார வாகனங்களின் மீதான உற்பத்தி திட்டங்களை அனைத்து மோட்டார் நிறுவனங்களும் சர்வதேச அளவில் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளை இயக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

நகர்ப்புற பகுதிகளில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார். 10000 மின்சார பேருந்துகள் வாங்க ரூ.77,613 கோடி ஒதுக்கப்படும். மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான திட்ட மதிப்பீடு ரூ.57, 613 கோடியில் ரூ.20,000 கோடியை ஒன்றிய அரசு தரும். ஒன்றிய அரசின் மின்சார பேருந்து திட்டத்தால் 45,000ல் இருந்து 55,000 பேர் வரை வேலைவாய்ப்பு கிடைக்கும் என அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

The post நாடு முழுவதும் 10,000 மின்சார பேருந்துகளை இயக்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Cabinet ,Union Minister ,Anurak Takur ,Delhi ,India ,
× RELATED தொடர் விபத்து, உயிரிழப்பு குறித்து...